×

காய்ச்சல் அறிகுறியுடன் வந்தாலே டெங்கு, கொரோனா பரிசோதனை கட்டாயம்

சென்னை: காய்ச்சல் அறிகுறி இருந்தால் டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்ெகாள்ள வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  மழைக்காலம் தொடங்கிய நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. 3 நாட்களுக்கு முன் நங்கநல்லூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  ெபாதுமக்களுக்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை, கொரோனாவிற்கு முந்தைய காய்ச்சல் அறிகுறி என்பதால், இந்த அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை மேற்ெகாள்ள வேண்டும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் கட்டாயம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள், வீடுகளை சுத்தப்படுத்துவதுடன், பயன்படுத்தும் நீரை மூடிவைத்து பயன்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Tags : corona testing , Symptoms of fever, dengue, corona
× RELATED திருப்பூர் உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை ஆய்வகம்