×

பிராடு அதிரடி அரை சதம் இங்கிலாந்து அணி 369 ரன்னில் ஆல் அவுட்

மான்செஸ்டர்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 57, சிப்லி 0, கேப்டன் ரூட் 17, ஸ்டோக்ஸ் 20 ரன்னில் வெளியேறினர். போப் 91, பட்லர் 56 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். போப் மேற்கொண்டு ரன் எடுக்காமல் அவுட்டானார். வோக்ஸ் 1, பட்லர் 67, ஆர்ச்சர் 3, ரன்னில் வெளியேறினர். பெஸ்  பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு அதிரடியாக 76 ரன் சேர்த்தது. பிராடு 62 ரன் (45 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), ஆண்டர்சன் 11 ரன்னில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பெஸ் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோச் 4, கேப்ரியல், சேஸ் தலா 2, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

Tags : England ,Brad Action Half , England team, West Indies team.
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது