×

நெய்மர் அசத்தல் பிஎஸ்ஜி அணிக்கு பிரெஞ்ச் கோப்பை

பாரிஸ்: பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் எடியன் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பிஎஸ்ஜி அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் வெற்றி கோல் அடித்து அசத்தினார். பிஎஸ்ஜி அணி 13வது முறயாக பிரெஞ்ச் கோப்பையை முத்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் 26வது நிமிடத்தில், எதிரணி கேப்டன் போயிக் பெரின் பிஎஸ்ஜி வீரர் மாப்பேவிடம் இருந்து பந்தை பறிக்க முயன்றபோது மாப்பே படுகாயம் அடைந்து வெளியேற நேரிட்டது. இதனால் களத்தில் இரு அணி வீரர்களும் வாக்குவாதம் செய்ததுடன் கைகலப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  போயிக் பெரினுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டதுடன், வீடியோ நடுவர் உத்தரவுப்படி வெளியேற்றப்பட்டார். இதனால் செயின்ட் எடியன் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் சிக்கியது.

Tags : PSG Neymar ,Cup ,French ,PSG , Neymar, PSG team, French Cup
× RELATED சிகப்பு கவுனி அரிசி ஸ்வீட்