×

ஊரடங்கு, ஆடி மாத மந்தம் உணவுப் பொருள் விற்பனை சரிவு: பாமாயில் டின்னுக்கு 80 உயர்வு

விருதுநகர்:  தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பால் ஊரடங்கு, தொழில்கள் முடக்கத்தால் வேலையிழந்த மக்கள் பணப்புழக்கமின்றி வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். இதனால்,அனைத்து உணவுப்பொருட்கள் விற்பனையும் மந்தமாக இருப்பதால் பருப்பு, பயறு, மளிகை பொருட்களின் விலை கடந்த வார நிலவரத்திலே தொடர்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கமாக புது பாசிப்பயறு வரத்து துவங்கும்போது பாசிப்பருப்பு விலை குறைவது வழக்கம்.ஆனால் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் பெய்யும் மழையால் பாசிப்பயறு புதுவரத்து ஈரப்பதமாக வருவதால், மூட்டைக்கு 10 கிலோ பயறு சேதமாகிறது. இதனால் பாசிப்பருப்பு விலை குறையவில்லை.

மலேசியாவில் குரூட் பாமாயில் விலை அதிகரித்துள்ளது. தமிழக அரசு ரேஷன் விநியோகத்திற்கு பாமாயிலை அதிக அளவில் கொள்முதல் செய்வதால் வெளிச்சந்தையில் பாமாயில் தட்டுப்பாடு நிலவுகிறது. ஊரடங்கு விற்பனை மந்தமாக உள்ளபோதும், பாமாயில் டின்னுக்கு 80 அதிகரித்துள்ளது. பாமாயில் டின் (15 கிலோ) - 1,350 (கடந்த வாரம் 1,270).



Tags : Audi , Curfew, Audi, food, sales decline
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...