×

ராமதாஸ் 82வது பிறந்த நாள் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் 82வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பிரதமர், கவர்னர், முதல்வர், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மற்றும் டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பாமக தலைமை வெளியிட்ட அறிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் 82வது பிறந்தநாளையொட்டி  பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் ஆனைமுத்து, பாஜக தலைவர் எல்.முருகன், சமக தலைவர் சரத்குமார், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்,

திமுக மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குலசேகரன், தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் முன்னாள் தலைவர் ராஜசேகரன், நீரிழிவு நோய் வல்லுனர் ராமச்சந்திரன், அப்போலோ மருத்துவமனை டாக்டர் பழனிச்சாமி, இதய நோய் வல்லுநர் செங்கோட்டுவேலு, முகசீரமைப்பு வல்லுநர் பாலாஜி, மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீடம் செந்தில்குமார், எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் தொலைபேசி மூலமாகவும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட தலைவர்கள் தொலைபேசி மற்றும் டிவிட்டர் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramdas ,Leaders ,birthday ,birthday greeting Leaders ,Ramadoss , Ramadoss, birthday, greeting leaders
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்