×

பெண் இன்ஸ்பெக்டருக்கு 2வது முறையாக கொரோனா: காவலர்கள் அதிர்ச்சி

சென்னை: திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பட்டாளம்  போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்த உளவுத் துறையில் பணியாற்றும் பெண் ஆய்வாளருக்கு  கடந்த மாதம் 27ம் தேதி  கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.  இந்நிலையில், கொரோனா  தொற்றில் இருந்து மீண்ட அவர் பணிக்கு திரும்புவதற்காக இரு தினங்களுக்கு முன்பு கொரோனா  பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று  இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.   பெண் ஆய்வாளருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று இருப்பது காவலர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும், அயனாவரம் மயிலப்பா தெருவில் இரண்டு பேருக்கும், பெரவள்ளூர்  பெரியார் நகர் எஸ்ஆர்பி கோயில் தெரு, ஜிகேஎம் காலனி ஆகிய பகுதிகளில் ஒருவருக்கும் திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒத்தவாடை தெருவில் 5 பேருக்கும் தீட்டி தோட்டம் பகுதியில் மூன்று பேருக்கும் செம்பியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அகரம் சின்னசாமி தெரு பகுதியில் இரண்டு பேருக்கும் இபி ரோடு பகுதியில் நான்கு பேருக்கும் அகரம் மூர்த்தி தெரு பகுதியில் இரண்டு பேருக்கும் செம்பியம் போலீஸ் கோட்ரஸ் பகுதியில் இரண்டு பேருக்கும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் ஒருவருக்கும் புளியந்தோப்பு பகுதியில் நான்கு பேருக்கும் கொளத்தூர்  ஜிகேஎம் காலனி பகுதியில் நான்கு பேருக்கும் என திருவிக நகர் மண்டலத்தில்  நேற்று ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

திருவொற்றியூர் காவல்நிலைய, சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கு இரு தினங்களாக, காய்ச்சல் இருந்தது. கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. எனவே, வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

Tags : Corona ,inspector ,guards , Female Inspector, Corona, Guards
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...