×

தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் கொரோனா பாதிப்புள்ள தெருவில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை: சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் தெருவில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  தற்போது வரை சென்னையில் 92 ஆயிரத்து 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 76 ஆயிரத்து 496 பேர் குணமைடைந்து உள்ளனர். 13 ஆயிரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1969 பேர் மரணம் அடைந்துள்ளனர். திருவொற்றியூரில் 413 பேர், மணலியில் 196 பேர், மாதவரத்தில் 407 பேர், தண்டையார்பேட்டையில் 591 பேர், ராயபுரத்தில் 817 பேர், திருவிக நகரில் 1,221 பேர், அம்பத்தூரில் 996 பேர், அண்ணா நகரில் 1,756 பேர், தேனாம்பேட்டையில் 1,136 பேர்,  கோடம்பாக்கத்தில் 2,189 பேர், வளசரவாக்கத்தில் 846 பேர், ஆலந்தூர் 536 பேர், அடையாறில் 1,155 பேர், பெருங்குடியில் 417 பேர், சோழிங்கநல்லூரில் 309 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்த 758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பத்தில் தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த தண்டையார்பேட்டை, ராயப்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனால் சென்னை மத்திய வட்டாரத்தில் உள்ள கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.
எனவே இதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மண்டலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்படும் தெருவில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மூன்று மண்டலங்களில் உள்ள எந்த தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் அந்த மண்டலங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்காக நடமாடும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : zones ,Chennai Corporation ,streets , Corona, Chennai Corporation
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...