×

28 ஆண்டுக்கு முன் போட்ட ஒப்பந்தப்படி ரூ164 கோடியை சரியா பிரிச்ச நீ... நண்பேன்டா..! நட்பை வலுப்படுத்திய அமெரிக்க நண்பர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 28 ஆண்டுக்கு முன் போட்ட ஒப்பந்தப்படி லாட்டரியில் விழுந்த ரூ164 கோடியை சரியா பிரித்துக் கொண்ட நண்பர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்காவில் நண்பர் ஒருவருக்கு 28 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்கின்படி தனக்கு லாட்டரியில் விழுந்த ரூ.164 கோடியை சமமாக பகிர்ந்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரைச் சேர்ந்த நண்பர்கள் டாம் குக் மற்றும் ஜோசப் பீனி. இருவரும் கடந்த 1992ம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இருவரில் யார் ‘பவர்பால்’ ஜாக்பாட்டை வென்றாலும் அதை சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான், அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம்.

இந்நிலையில் ஏறக்குறைய 28 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் டாம் குக் பவர்பால் ஜாக்பாட் டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக டாம் குக்குக்கு ரூ.164 கோடிக்கு லாட்டரி விழுந்தது. உடனடியாக இந்தத் தகவலை ஜோசப் பீனிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இப்போது பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற பின்பு மீன்பிடி தொழிலில் இருக்கும் ஜோசப் பீனியால், பரிசுத் தொகையை நம்ப முடியவில்லை. மேலும் டாம் குக் ‘கடந்த 1992ம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தின்படி இருவரும் சரிபாதியாக இந்தப் பணத்தை பிரித்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார். அதன்படி, இருவருக்கும் சம்பந்தப்பட்ட பரிசுத் தொகை நிறுவனத்தினர் பணத்தை பாதியாக பிரித்துக் கொடுத்து கவுரவப்படுத்தினர்.

இதுகுறித்து டாம் குக் கூறுகையில், ‘பரிசுத் தொகை பணத்தை வைத்து மிகப்பெரிய திட்டமிடல் ஒன்றுமில்லை. மகிழ்ச்சியாக ஊர் சுற்றலாம். எஞ்சி இருக்கிற பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையை நிம்மதியாக கழிக்கலாம்’ என்று கூறினார். இதுகுறித்து பீனி கூறுகையில், ‘பெரிய பரிசுத் தொகை வரும்போது அதைப் பிரித்துக் கொள்வோம் என்று கூறினோம்; எனவே ஒவ்வொரு வாரமும் (ஒரு டிக்கெட்) வாங்குவோம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒப்பந்தப்படி, தற்போது அது நிறைவேறி உள்ளது. நண்பனுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.

Tags : friends ,American , Friendships strengthened, American friends
× RELATED சமூக வலைத்தளம் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதால் கொன்றோம்