×

காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு எதிரொலி: மாநகராட்சி கட்டிடத்தில் மீண்டும் காமராஜர் பெயர்

நாகர்கோவில்: காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக ஆசாரிபள்ளத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் மீண்டும் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாகர்கோவில் நகராட்சியுடன் ஆசாரிபள்ளம் பேரூராட்சி இணைக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி பராமரிப்பில் ஆசாரிபள்ளம் பேரூராட்சி அலுவலக கட்டிடம் தற்போது இருந்து வருகிறது. இந்த கட்டிடத்திற்கு 1975ம் சூட்டப்பட்டிருந்த காமராஜர் மண்டபம் என்ற பெயரை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் மாற்றிவிட்டு ‘நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம், ஆசாரிபள்ளம் (மேற்கு மண்டலம்)’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராபர்ட்புரூஸ் மற்றும் நிர்வாகிகள் காங்கிரஸ் ஓபிசி பிரிவு தென் மண்டல தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம், காமராஜர் மண்டபத்தில் காமராஜர் பெயரை மீண்டும் பொறிக்க வேண்டும், இல்லையெனில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று மாநகராட்சி கட்டடத்தில் காமராஜர் மண்டபம் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த பெயரில் திருத்தம் செய்யப்பட்டு புதிய பெயர் எழுதப்பட்டுள்ளது.

Tags : protest ,announcement ,Kamaraj ,Congress ,corporation building , Congress, Corporation Building, Kamaraj
× RELATED சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் ...