×

மகாராஷ்டிராவில் பள்ளிப் பாடங்களை 25 விழுக்காடு குறைக்க மாநில அரசு ஒப்புதல்

மும்பை: மகாராஷ்டிராவில் பள்ளிப் பாடங்களை 25 விழுக்காடு குறைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள பாடங்களை 25 விழுக்காடு குறைத்துக் கொள்ளலாம் என மகாராஷ்டிர கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மகாராஷ்டிரப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தெந்தப் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் விரைவில் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு 4 மொழிகளில் விளம்பரம் இல்லாத யூடியூப் சேனல்களை மகாராஷ்டிர அரசு தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. புதிய கல்வியாண்டு தொடங்கி சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கி நடத்தி வருகின்றன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் சார்பில் கற்பித்தல் நிகழ்வுகளும் தொடங்கப்பட்டுள்ளன.Tags : State government ,Maharashtra ,School , Maharashtra, School
× RELATED மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில்...