×

காஃபி டேவின் வளர்ச்சியையும், பணியாளர்களின் வளர்ச்சியையும் கவனிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கிறேன்: மாளவிகா ஹெக்டே

பெங்களூரு: மறைந்த காஃபி டே நிறுவனர் வி.ஜி சித்தார்தாவின் மனைவியும், காபி டே இயக்குனர்களில் ஒருவருமான மாளவிகா ஹெக்டே, சித்தார்த்தா எனக்கு முக்கியமான வேலையை விட்டுச் சென்றிருக்கிறார். நிறுவனத்தின் கடனை அடைப்பதில் முழுத்திறனை செயல்படுத்துவேன். காஃபி டேவின் வளர்ச்சியையும், பணியாளர்களின் வளர்ச்சியையும் கவனிக்க வேண்டிய முக்கிய வேலையை ஏற்றிருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

காபி டே நிறுவனர் சித்தார்த்தா கடந்த வருடம் ஜூலை இறுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இந்தியா முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென்று காணாமல் போன அவர், மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

காரில் மீட்டிங்கிற்கு சென்று திரும்பியவர், பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை ஒருநாள் முழுக்க தேடி பின் மறுநாள்தான் அவரது உடலை கண்டுபிடித்தனர். நேத்ராவதி ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் மூலம் அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சித்தார்த்தா மரணத்திற்கு பொருளாதார பிரச்சனையே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் காரணமாக இவர் கஷ்டப்பட்டு வந்தார். இந்த தொடர் நிதி பிரச்சனை அவரை மொத்தமாக முடக்கி போட்டது. இதுதான் இவரை தற்கொலைக்கு தூண்டியது. சித்தார்த்தாவின் மரணம் குறித்த புலனாய்வு அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் கர்நாடக முதலமைச்சரின் மகளும், காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தாவின் மனைவியுமான மாளவிகா ஹெக்டே, இந்நிறுவனத்தை இவ்வளவு பிரமாண்டமாக்க தோளோடு தோளாக நின்று உழைத்திருக்கிறோம். நிறுவன வளர்ச்சியிலும், கடன் தீர்ப்பதிலும் சிறந்த பங்காற்றுவேன் எனத் தெரிவித்திருக்கிறார்.



Tags : Coffee Day ,Malvika Hegde ,Siddhartha , Coffee Day, Malvika Hegde, Siddhartha
× RELATED மாணவர்களுக்கு சமூகம் சார்ந்த கல்வியை சொல்லிக் கொடுங்கள்!