×

வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து- அரசு கையகப்படுத்துவதில் உடன்பாடு இல்லை: ஜெ.தீபா

சென்னை: வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று ஜெ.தீபா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் சொத்துக்கு வாரிசு நாங்கள்தான் என்று நீதிமன்றமே கூறி உள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

வேதா இல்லத்தை அரசு மதிப்பீடு செய்ததை ஏற்க முடியாது. எதன் அடிப்படையில் அரசு இழப்பீட்டை மதிப்பிட்டது என்று தெரியவில்லை என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து,  ஜெயலலிதா, வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு நினைவில்லமாக்க அவசர சட்டத்தையும் பிறப்பித்தது.



Tags : Vedha House Our Native Property ,J.Deepa ,Jayalalithaa ,Vedha Illam , Vedha Illam, J.Deepa, Jayalalithaa
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...