×

ஆந்திராவில் போதிய வருமானம் இல்லாததால் நூதன முறையில் சாகுபடி!: மகள்களை கொண்டு ஏர்-பூட்டி உழுத விவசாயி!!!

சித்தூர்: ஆந்திராவில் போதிய வருமானம் இல்லாததால் பெற்ற மகள்களை கொண்டு ஏர்-பூட்டி உழுது விவசாயி ஒருவர் நூதன முறையில் சாகுபடி செய்ததால், அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி என்ற கிராமத்தில் நாகேஸ்வரராவ் என்பவர் தனது குடுப்பத்துடன் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இதனால், தன்னிடமுள்ள நிலத்தில் உழுது செய்து நலமாக வாழ்ந்து வந்தார். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக அவருடைய இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாக அவர் தனது நிலத்தில் தக்காளி பயிரிடுவதாக முடிவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். அதன்பின் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், போதிய வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, தான் பெற்ற மகள்களை கொண்டு ஏர்-பூட்டி நிலத்தை உழுது வந்தார். இதன் பிறகு உழுத நிலத்தில் அவரது மனைவி விதைகளை தூவிக்கொண்டு சென்றார். மனைவி, மகள்களுடன் நாகேஸ்வரராவ் சந்தோசமாக உழவு பணிகளை மேற்கொண்டு வந்தார். இருப்பினும் அவரது நிலையை கண்டு அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். இதுகுறித்து பேசிய நாகேஸ்வரராவ், தனது நிலம் தாயை போலவும், அதில் குடும்பத்துடன் வேலை செய்வதில் எந்த வருத்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : plow farmer ,Andhra Pradesh ,daughters , Andhra, Income, Cultivation, Farmer
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி