×

சிவகாசி தட்டாவூரணி கால்வாயில் குப்பைக்கழிவுகளால் கடும் சுகாதாரக்கேடு

சிவகாசி: சிவகாசி தட்டாவூரணி கால்வாயில் குப்பைக்கழிவுகள் குவிந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சி பஸ்நிலையம் பின்புறம் தெய்வானை நகர், காந்தி ரோடு, ஜக்கம்மாள் தெருவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள காந்தி ரோடு தெருவில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. 150 க்கும் மேற்பட்ட அச்சகங்கள், பேப்பர் நிறுவனம், பாலித்தீன் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. நகரின் மைய பகுதியில் இப்பகுதி அமைந்துள்ள போதும் இங்கு போதிய அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை.

வாறுகால் பெயர்நது கிடப்பதால் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இங்குள்ள வீட்டுமனைகளுக்கு நகராட்சி நிர்வாகம் முழுவதும் அனுமதி வழங்கவில்லை. இதனால் மயானச்சாலை அமைந்துள்ள பகுதி அலுவலகங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. வீட்டு மனை முறைப்படுத்தும் திட்டத்தில் இப்பகுதி மக்கள் முறையாக விண்ணப்பித்தும் சாலை, வாறுகால் போன்ற அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர தொடர்ந்து மறுத்து வருகிறது.இதனால் காந்தி ரோடு தெருவில் பாதி இடங்களில் மண் சாலையாக உள்ளது.

இதனால் வாகனங்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றன. ஜக்கம்மாள் கோயில் அருகே உள்ள தெருவில் குப்பைக்கழிவுகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். மேலும் சாலைகள் குண்டும், குழியுமாக பெயர்ந்து கிடக்கிறது. தட்டாவூரணி கல்வாயில் குப்பைக்கழிவுகள் குவிந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் கொசுக்கடியால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தட்டாவூரணி கால்வாயை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : canal ,Sivakasi Thattavurani , Sivakasi, Thattavurani Canal, Garbage
× RELATED ரேஷன் கடை முன் குப்பைபோல் குவிந்து...