×

புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வழக்கில் ஒருவர் கைது!!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 20 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மல்லிகைனத்தம் என்ற பகுதியில் அரவிந் என்ற 20 வயது இளைஞன் வசித்து வருகிறார். அவர் சில தினங்களுக்கு முன்பு எதிர் வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அரவிந்தை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் பலாத்காரத்தில் காயமடைந்த சிறுமி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த நிலையில், மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pudukkottai Man ,Pudukkottai , Pudukottai, 7-year-old girl, sex case, arrested
× RELATED முதியவரிடம் வழிப்பறி