×

புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், சட்டப்பேரவை கூட்டம் மரத்தடியில் நடத்த முடிவு!!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் சட்டசபை கூட்டமானது மரத்தடியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2 தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலுக்கு கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் வெளியான நிலையில், ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவர் பங்கேற்ற சட்டப்பேரவை கூட்டமானது தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டமானது கட்டாயமாக நடைபெறும் என சபாநாயக்கர் சிவக்கொழுந்து அவர்கள் அறிவிப்பை வெளியிட்டார். அதன் அடிப்படையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இருக்கும் திறந்தவெளி பகுதியான மரத்தடியில் சட்டப்பேரவை கூட்டமானது நடைபெறவுள்ளது. தற்போது இதற்கான ஆயத்தப்பணிகள்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் அமர்வதற்கு போதுமான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தற்காலிக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒலிபெருக்கி உள்ளிட்ட மின்சாதன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூட்டமானது மதிய வேளையில் நடைபெறுவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக ஆங்காங்கே பல்வேறு பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது நடைபெறும் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர், சபை கூட்டமானது காலவரையற்ற முறையில் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : meeting ,legislature ,Puducherry MLA ,assembly , Puducherry, MLA, Corona, Meeting of the Legislature
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்