×

குடியாத்தம் அருகே பரபரப்பு; பழுதாகி நின்ற 108 ஆம்புலன்சை தள்ளி விட்ட கொரோனா நோயாளி: அதிகாரிகள் விசாரணை

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கொரோனா நோயாளியை அழைத்து சென்ற 108 ஆம்புலன்ஸ் பழுதாகி பாதியில் நின்றது. இதையடுத்து அந்த நோயாளியும் சேர்ந்து ஆம்புலன்சை தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் அருகே கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவரை 108 ஆம்புலன்சில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றனர். குடியாத்தம்- நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது 108 ஆம்புலன்ஸ் திடீரென பழுதாகி நின்றுவிட்டது.

இதனால், குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், 108 ஆம்புலன்சில் இருந்த கொரோனா நோயாளி மற்றும்  முழுகவச உடையில் இருந்த மருத்துவ உதவியாளர்கள்  ஆம்புலன்சை தள்ளினர். பின்னர் ஆம்புலன்ஸ் இயங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிய நிலையில், டிரைவர் கிருபா மற்றும் மருத்துவ உதவியாளர் தயாநிதி ஆகியோரிடம் 108 ஆம்புலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : patient ,Unrest ,Corona ,Gudiyatham , Gudiyatham, 108 Ambulance, Corona Patient
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...