×

டெல்லி தொடரும் கொரோனா உயிர் பலி… மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு மருத்துவர் உள்பட 8 நோயாளிகள் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மருத்துவர் உள்பட 8  கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளது பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் 2-ம் அலை மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு சொல்லமுடியாத அளவில் உள்ளது. டெல்லியில் இதுவரை 11,49,333 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16,147 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் ஏற்படும் விபத்துகள், மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் உயிர் காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் போன்றவற்றாலும் மக்களின் உயிர் பறிக்கப்படுகிறது.  அந்தவகையில் டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்று அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவரும் அடங்குவார். இந்தநிலையில் டெல்லி உள்ள மருத்துவமனைகளில் ஒருவாரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது….

The post டெல்லி தொடரும் கொரோனா உயிர் பலி… மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரு மருத்துவர் உள்பட 8 நோயாளிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Corona death ,Delhi ,Batra Hospital ,Corona ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...