×

கொத்தனார் தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காரணை கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டவன் (38). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர் தினமும் குடித்துவிட்ட வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த 11ம் தேதி பணி முடிந்து போதையில் வீட்டுக்கு வந்த அவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்து வந்து, தன் உடலில் ஊற்றி திடீரென தனக்கு தானே தீ வைத்து கொண்டார்.

இதில், பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : mason ,suicide , Masonry, suicide
× RELATED முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி...