×

சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

திருவள்ளூர்: சென்னையில் இருந்து நேற்று அதிகாலை லாரி ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி புறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமானது. இதில் சரக்கு லாரியை ஓட்டிவந்த டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லாரியை கிரேன் மூலம் வெளியே கொண்டு வந்து மீட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Center median, truck, accident
× RELATED சேலம் மாவட்டத்தில் நின்ற ஆம்னி...