×

அடுத்தடுத்த வீடுகளில் பணம், நகை கொள்ளை

ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், கோலாச்சியம்மன் நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் (40).  தனியார் கம்பெனி  ஊழியர். கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வந்தவாசியில் உள்ள தம்பி வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அவரது  வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அவர் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதேபோல், ஆவடி அடுத்த வீராபுரம், மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (40). ஆவடி  மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர்.

கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அம்பத்தூரில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள், ₹38 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. மேற்கண்ட இரு கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Tags : houses ,jewelry robbery , Adjacent houses, money, jewelry, robbery
× RELATED ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்