×

கொரோனாவுக்கு அதிகாரி பலி

திருத்தணி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். திருத்தணி நகராட்சியில் வசிப்பவர் வெங்கடேஸ்வரலு (55).  இவர், திருத்தணி உப கோட்ட பொதுப்பணி துறையில், பள்ளிப்பட்டு இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இளநிலை பொறியாளர்  பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் அடக்கம் செய்தனர்.

மேலும் 386 பேருக்கு தொற்று
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி, திருநின்றவூர் மற்றும் சில ஒன்றியங்களில் 386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tags : Officer ,Corona , Corona, officer killed
× RELATED மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை மாயம் ஐகோர்ட் உத்தரவில் போலீசார் வழக்கு