×

பேரூராட்சி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் 30க்கும் மேற்பட்ட நிரந்தர, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். கடந்த மார்ச் முதல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், திருப்போரூர் பேரூராட்சி ஊழியர்கள் சுமார் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பங்கேற்ற ஊழியர்களின் சளி மற்றும் எச்சில் மாதிரி எடுக்கப்பட்டு, சென்னையில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்றும் பரிசோதனை முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Tags : testing ,Corona , Municipal employee, corona examination
× RELATED புதுச்சேரியில் தினந்தோறும் 5,000...