×

மாமல்லபுரம் அருகே காவலாளிக்கு கத்தி வெட்டு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே காவலாளிக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் வைஜெயந்திமாலா. மாமல்லபுரம் அடுத்த தெற்கு பட்டு கிராமம் பொன்னியம்மன் கோயில் பின்புறம், வைஜெயந்திமாலாவுக்கு சொந்தமான பங்களா வீடு உள்ளது. அந்த பங்களாவில், சில நேரங்களில் தங்கி ஓய்வெடுக்க பயன்படுத்தி வந்தார். அங்கு, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (42), அவரது மனைவி பாரதி (35), மாமனார் (70) ஆகியோர் காவலாளியாக, தங்கி வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த பங்களாவுக்குள், மர்மநபர்கள் 3 பேர் நுழைந்து, அங்கிருந்த ராஜேந்திரன் உள்பட 3 பேரையும், கட்டி போட்டு அனைத்து அறைகளிலும் ஆராய்ந்தனர். ஆனால், ஏதுவும் கிடைக்கவில்ைல. இதனால், ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள், பாரதியின் ஒரு காதில் இருந்த அரை சவரன் கம்மளை கழற்றி கொண்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த ராஜேந்திரன் அலறி கூச்சலிட்டார். இதில்  ஆத்திரமடைந்த மர்மநபர்கள், கையில் இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரன் தலையில் சரமாரியாக வெட்டினர். அதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கினார்.

தகவலறிந்து, மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த ராஜேந்திரனை மீட்டு கோவளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Mamallapuram , Mamallapuram, guard, knife cut
× RELATED கத்தியுடன் சுற்றிய 2 பேர் கைது