×

ஸ்ரீகருக்காத்தம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்ரீகருக்காத்தம்மன் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று 5 ஆயிரம் வளையலால் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் அம்மனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, கோயிலுக்கு வந்த பெண்கள் கொரோனா பற்றி விழிப்புணர்வு இல்லாமலும், முக கவசம் அணியாமலும் பெரும்பாலானா பக்தர்கள் வந்தனர்.

அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக முக கவசம் வழங்கி, அதை, அணிந்த பிறகே அனுமதித்தனர். விழாஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.கோதண்டபாணி, ஆடிப்பூர விழா குழுவினர் செய்தனர்.Tags : Adipura Festival ,Srikarukkathamman Temple , Srikarukkathamman Temple, Adipura Festival
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்...