×

மீண்டும் புதிய சர்ச்சை; சிறையில் சசிகலாவுக்கு சமைக்க அனுமதியா?... சிறைத்துறை அதிகாரி மறுப்பு

பெங்களூரு: ‘பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சமைப்பதற்கு அனுமதி வழக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை,’  என்று சிறைத்துறை நிர்வாகம் மறுத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில்  கைதான தண்டணை கைதியான சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 2021ம் ஆண்டு அவர் விடுதலையாக உள்ள நிலையில், அவரை பற்றி பல்வேறு வதந்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், ஜாமீனில்  வெளியே வர இருப்பதாக வதந்தி பரவியது. இதை சிறை நிர்வாகம் மறுத்து விட்டது.

தண்டணை காலம் முடிந்த பின்னர்தான் அவர் விடுதலையாக வாய்ப்பு என்று தெரிவித்தது. இந்நிலையில், சசிகலாவிற்கு சிறைக்குள் தனியாக சமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்தாகவும் சசிகலா மீது ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த புதிய வதந்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை சிறைத் துறை வட்டாரம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

‘சசிகலாவுக்கு சிறை உணவே வழங்கப்படுகிறது. தனியாக சமைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை,’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சிறையில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு லஞ்சம் கொடுத்தாகவும் சசிகலா மீது ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Sasikala ,jail ,Prison official , Prison, Sasikala, Permission to cook, Prison Officer
× RELATED பெங்களூரு சிறையில் இருந்து விரைவில்...