×

லடாக் எல்லையில் இருந்து விரைவாகவும், முழுமையாகவும் படைகளை வாபஸ் பெற முடிவு: இருதரப்பு பேச்சுக்குப் பின் இந்தியா, சீனா அறிவிப்பு

புதுடெல்லி: லடாக் எல்லையில் இருந்து விரைவாகவும், முழுமையாகவும் இருநாட்டு ராணுவத்தையும் வாபஸ் இந்தியாவும், சீனாவும் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் இருநாட்டு ராணுவமும் தங்களின் படைகளை குவித்துள்ளன. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு, இருநாட்டு ராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், கல்வான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இருந்தும் சீன ராணுவம் வாபஸ் பெற ஒப்புக் கொண்டது. ஆனால், பெயரளவுக்கு மட்டுமே தனது படைகளை வாபஸ் பெற்றது. இதை இந்தியா ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான ‘ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல்பாட்டு அமைப்பு’ மூலமாக., நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ‘இருநா்டுகளும்  தங்கள்  ராணுவத்தை எல்லைப் பகுதிகளில் இருந்து விரைவாகவும், முழுமையாகவும் வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது,’ என இந்திய வெளியுறவு அமைச்சகமும், சீன அதிகாரிகளும் அறிவித்தனர்.

Tags : talks ,border ,troops ,Ladakh ,India ,China , Ladakh border, force, withdrawal, end
× RELATED ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில்...