×

சில்லி பாயின்ட்…

* ரயில்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஷிராஸ் தர்ஸி (73) நேற்றுகாலமானார்.
* நடப்பு சீசனுக்கான மேலும் 11 ஏடிபி மற்றும் டபுள்யுடிஏ டென்னிஸ் தொடர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
* இங்கிலாந்து  வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே நடைபெற்று வந்த விஸ்டன் டிராபி டெஸ்ட் தொடர், இனி சர் விவியன் ரிச்சர்ட்ஸ்  இயான் போதம் டிராபியாக பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
* பேஸ்பால் மற்றும் கால்பந்து போட்டிகளுக்கு ரசிகர்களை அனுமதிக்க தென் கொரியா அரசு முடிவு செய்துள்ளது.

* ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ள இந்திய அணியில் 26 வீரர்கள் இடம் பெறுவது சரியான முடிவாக இருக்கும். அப்போது தான் கொரொனா பிரச்னையை எளிதாக சமாளிக்க முடியும் என்று முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
* ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரையிலான காலத்தை ஐபிஎல் டி20 தொடருக்காக ரிசர்வ் செய்துள்ளோம் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் கூறியுள்ளார்.
* இந்தியாவில் வரும் செப்டம்பர்-அக்டோபரில் விளையாட்டுப் போட்டித் தொடர்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* லிவர்பூல் கால்பந்து அணியின் கேப்டன் ஜார்டன் ஹெண்டர்சன், இங்கிலாந்து நாட்டின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : Shiraz Darcy ,Football Tournament , Shiraz Darcy, WTA Tennis, Football Tournament
× RELATED சில்லி பாயின்ட்...