×

நோய் எதிர்ப்பு சக்தி சமூகம் உருவானதா? இன்னும் இல்லை!.. உலக சுகாதார அமைப்பு விளக்கம்

‘நோய் எதிர்ப்பு சக்தி சமூகம்’ என்பது 2 வகைப்படும். ஒன்று, இயற்கையாக உருவாகுவது., 2வது தடுப்பூசி மூலம் ஏற்படுவது. மனிதர்களை கொன்று குவிக்கும் கொள்ளை நோய்கள் உலகளவில் பரவும்போது, அதை தடுப்பதற்கு அந்த நேரத்தில் தடுப்பூசிகளோ அல்லது மருந்துகளோ இருக்காது. நோய் தோன்றிய பிறகுதான், பெரும்பாலும் இந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். கொரோனா வைரஸ் பிரச்னையிலும் இப்போதுதான் நடந்து கொண்டிருக்கிறது. முதல் வகையான நோய் எதிர்ப்பு சக்தி சமூகம் என்பது, தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில், மக்களிடம் அந்த நோய் பரவலாக பரவி, அதில் இருந்து மீண்டவர்களின் உடலில் இயற்கையாகவே அந்த நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தி உருவாகும்.

2வது வகையில், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு அதை செலுத்துவதின் மூலம் ஏற்படும் எதிர்ப்பு சக்தியாகும். கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையி–்ல், தற்போது இதில் முதல் வகையான எதிர்ப்பு சக்தி சமூகம்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது முழு அளவில் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு நேற்று கூறியுள்ளது. கொரோனாவை பொருத்தவரை, அது உலகளவில் பரவாமல் இருப்பதற்கு மக்கள்தொகையில் 60 சதவீத்ததினருக்கு இந்த வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டும்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா சுவாமிநாதன் சமூக ஊடக நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கூறியதாவது: கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அங்கு 5 முதல் 10 சதவீத மக்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த நாடுகளில் 20 சதவீத மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்திருக்க வேண்டும். தற்போது, கொரோனா பாதிப்பு உலக நாடுகள் முழுவதும் பரவி வருவதால், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகி வரும். அவர்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி சில நாட்களில் நோய் பரவாமல் தடுக்கும் காரணிகளாக மாற்றம் பெறும்.

ஆனால் சில நிபுணர்கள், `இத்தகைய சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாக மொத்த மக்கள்தொகையில் 70 முதல் 80 சதவீத்ததினரிடையே  நோய் எதிர்ப்பு சக்தி உருவாக வேண்டும் என கணித்துள்ளனர். அதே நேரம், மக்கள் இடையே நோய் தொற்று அதிகளவில் பரவி அதன் மூலம் சமூக நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை விட, தடுப்பு ஊசியின் மூலம் உருவாக்கப்படுவது நன்மை பயக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘இப்போது பார்ப்பது இயற்கை’
சவும்யா சுவாமிநாதன் மேலும் கூறுகையில், ‘‘நோய் தொற்றின் மூலம் இயற்கையாக சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முதல் அலை, 2ம் அலை என பல்வேறு நிலைகளை கடக்க வேண்டியது இருக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்து வருகிறது. எனவேதான், இந்தளவு பாதிப்பையும், பலியையும் நாம் சந்தித்து வருகிறோம்,’’ என்றார்.


Tags : World Health Organization , Immunity, World Health Organization
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...