நடிகர்கள் விமல், சூரி மீன் பிடித்த விவகாரம்: வேட்டை தடுப்பு காவலர்கள் டிஸ்மிஸ்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பேரிஜம்  வனப்பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சினிமா நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சென்று ஏரியில் மீன் பிடித்தனர். பேரிஜம் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக நடிகர்கள் விமல், சூரிக்கு வனத்துறையினர்  தலா ₹2,000 அபராதம் விதித்துள்ளனர். நடிகர்களை பேரிஜம் வனப்பகுதிக்குள் சென்று வர அனுமதித்ததாக தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்களான அருண், சைமன் பிரபு, செல்வம் ஆகியோரை அதிரடியாக பணிநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளனர். அதிகாரிகளை விட்டுவிட்டு 3 வேட்டை தடுப்பு காவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More