×

போலி இமெயில் ஐடி உருவாக்கி தவறான தகவல் பரப்பிய விவகாரம்; மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலி இமெயில் ஐடி உருவாக்கி தவறான தகவல் பரப்பிய விவகாரம் தொடர்பாக மாரிதாஸ் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளிக்கப்பட்ட புகார்  மனுவில், ‘போலி இமெயில் முகவரியை உருவாக்கி தவறான தகவல்களை உண்மைக்கு புறம்பாக மாரிதாஸ் என்பவர் தனது யூடியூப் சேனல் மூலம் மக்களிடையே பரப்பி வருகிறார். அவர் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வேல் முருகன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் மாரிதாஸ் போலி இமெயில் முகவரியை உருவாக்கி அதன் மூலம் தனது இமெயிலுக்கு தகவல் வந்ததாக தனது யூடியூப் சேனலில் தவறான தகவல்களை பரப்பியது தெரிய வந்தது.  இதை தொடர்ந்து மாரிதாஸ் மீது ஐபிசி 465, 469, 471, 56பி, 43 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tags : Federal Criminal Police ,Maridas ,Case , Fake Email ID, Maridas, Prosecution, Federal Criminal Police
× RELATED பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது