×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 27ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: காணொலிக்காட்சி வாயிலாக நடக்கிறது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27ம் தேதி காணொலி காட்சி வாயிலாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனாபாதிப்பு தற்போதைய சூழ்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது மற்ற மாவட்டங்கையும் கொரோனா பாதிப்பு ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் ெகாரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,36,793 ேபர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 3,232 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் மட்டும் 90,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 ஆயிரத்து 384 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 1947 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்த போதிலும் பாதிப்பு, உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை. அதிகரித்து வருவது மக்களை கலக்கமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு விவரம் மற்றும் உயிரிழப்புகளை அரசு முழுமையாக வெளியிடுவது இல்லை. தொடர்ந்து மறைத்து வருவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மை நிலவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் வருகிற 27ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 27ம் தேதி(திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெறும். இதில் அதிமுக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் பொருள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : MK Stalin ,party meeting ,DMK ,chairmanship , DMK, MK Stalin, All Party Meeting
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...