×

கொரோனாவில் இருந்து 80 வயதான முன்னாள் குஜராத் முதல்வர் சங்கர்சிங் வகேலா குணமடைந்தார்: தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ: சமூகவலைத்தளங்களில் வைரல்..!!

காந்திநகர்: உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து 80 வயதான முன்னாள் குஜராத் முதல்வர் குணமடைந்துள்ளார். கடந்த 1997 ம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் சங்கர்சிங் வகேலா. காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். மேலும், 2017ம் ஆண்டு காங்கிரஸ், கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இதனையடுத்து, கடந்த மாதத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வகேலா பிறகு காந்திநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 16ம் தேதி கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் வீடு திரும்பிய முன்னாள் முதல்வர் வகேலா, தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டார். தினமும் வாக்கிங் செல்வது மட்டுமில்லாமல் பளு தூக்கும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.

பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டார். Body fit+Mind fit= Life hit என்ற தலைப்பில் சங்கர்சிங் வெளியிட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்ளில் வைரலாகி வருகின்றது. முன்னதாக கொரோனாவிலிருந்து குணமடைய வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Tags : Sankarsingh Vakhela ,Corona ,Gujarat , Corona, Chief Minister of Gujarat, Sankarsingh Vakhela
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?