×

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக  தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் மானியக் கோரிக்கை தொடர்பான கோப்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் தனது அனுமதி பெறாமல் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது என்றும் ஆளுநர் கிரண்பேடி தடைவிதித்தார்.

இருப்பினும் ஆளுநரின் தடையை மீறி பேரவையில் முதல்வர் நாராயணசாமி கடந்த  திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். ஆளுநர் வராத நிலையில் ஆளுநர் உரை ஒத்திவைக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். தன்னிடம் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் செல்லாது என்றும் அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை என்றால் அதற்கு தான் பொறுப்பு அல்ல என்றும் ஆளுநர் கிரண்பேடி அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி கடந்த 4 ஆண்டுகளாக எந்த நடைமுறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதோ அதேபோல் தான் இந்த நடப்பு நிதி ஆண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என தெரிவித்தார். இந்த பட்ஜெட்டுக்கு ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, Budget, Resignation, Chief Minister Narayanasamy
× RELATED நீட் தேர்வு மரணங்களுக்கு மத்திய அரசு...