×

கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசியை தினமும் 7 கோடி டோஸ் தயாரிக்க இருக்கிறோம் : இந்திய மருத்துவ நிறுவனம் அதிரடி அறிவிப்பு

மும்பை : கொரோனாவால் ஒழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் நாளொன்றுக்கு 7 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்திய மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை ஒழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் புதிய தடுப்பூசியை உருவாக்கி இறுதிக்கட்ட பரிசோதனையை நடத்தி வருகிறது.

இந்த தடுப்பூசி நல்ல பலனை ஏற்படுத்தி வருவதால், இதனை இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, 1000 ரூபாய்க்கு குறைவான விலையில் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடூயிடின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனை ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முறைப்படி அனுமதியும், தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் தொடங்கினால் நாளொன்றுக்கு 7 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் சோதனை நடத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Govishield: Indian Medical Association , Cow Shield, Corona, Vaccine, 7 Crore, Dose, Indian Medical Institute, Action, Announcement
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...