×

குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: சத்யபிரதா சாகு

சென்னை: குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். செப்டம்பர் 7க்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்த தயார் எனவும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரு மக்களவை தொகுதிக்கும் இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு செப்டம்பர் 7ம் தேதி வரை இடைத் தேர்தலை நடத்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் மறு ஆய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது காலியாக உள்ள 56 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தலை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கான அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இதுபற்றி கூறுகையில், குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. செப்டம்பர் 7ஆம் தேதிக்கு பிறகு இடைத்தேர்தல் நடத்த தயராக உள்ளதாகவும் கூறினார்.



Tags : Gudiyatham ,Tiruvottiyur ,constituencies ,elections ,Election ,Satyaprada Saku , Gudiyatham, Tiruvottiyur, Election
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல்...