×

கன்னியாகுமரியில் தனியார் நிதி நிறுவனங்கள் மீது மகளிர் குழு புகார்: கடனை திருப்பி செலுத்துவமாறு மிரட்டுவதாக குற்றச்சாட்டு!!!

கன்னியாகுமரி:  கன்னியாகுமரியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள், தவணை செலுத்த மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. அரசு, கொரோனா காரணமாக மக்களிடம் கடன்களை பெற கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக அனைத்து நிதி நிறுவனங்களும் கடன்களை செலுத்த மக்களுக்கு கால அவகாசத்தை கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும் ஒருசில இடங்களில் நெருக்கடியானது மக்களுக்கு கொடுக்கப்பட்டுதான் வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில், தனியார் நிதி நிறுவங்களில் கடன் பெற்ற மகளிர் சுயஉதவி குழுவினர் ஊரடங்கு காரணமாக மாத தவணை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடனை திரும்ப செலுத்தக்கோரி நிதி நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடி கொடுப்பதாக சுய உதவி குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு நிதி நிறுவனங்கள் தொல்லை கொடுத்துள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் நிதி நிறுவனங்களில் கடனை செலுத்த கால அவகாசம் பெற்றுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதுவரை மாதந்தோறும் தனியார் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை முறையாக செலுத்தி வந்ததாக மகளிர் சுயஉதவி குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது, கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வருமானம் ஈட்ட முடியாததால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால், தனியார் நிதி நிறுவனங்களில் கடனை திரும்ப செலுத்த 6 மாத கால அவகாசம் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : institutions ,group ,Kanyakumari , private financial institutions , Kanyakumari: ,threatening , repay loan ,
× RELATED திரும்பி செல்ல முடியாமல் தவிக்கும்...