×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பு 3 ச.கி.மீ குறைக்கப்படுவதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பு 3 சதுர கிலோ மீட்டர் குறைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. சன் பார்மா என்ற மருந்து நிறுவனத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு எதிராக சமூக ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையை 5 சதுர கிலோ மீட்டரில் இருந்து 3 சதுர கிலோ மீட்டராக குறைக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதேசமயம் சன் பார்மா நிறுவனத்தின் மனுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருந்தாலும் மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒப்புதல் பெற மறுக்கப்பட்டிருந்ததால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்திருக்கிறார்கள். அதேசமயம் மனுதாரர் தரப்பில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையை 3 சதுர கிலோ மீட்டராக குறைக்க கூடாது என கோரிக்கைவைக்கப்பட்டது.

இது தொடர்பாக அரசிடம் புதிய மனுவினை அளித்து நிவாரணம் பெறலாம் என நீதிபதிகள் மனுதாரர் தரப்பிற்கு அறிவுறுத்தியுள்ளனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழகத்தில் அமைந்துள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் உணவு மற்றும் தட்பவெப்பநிலைக்காக வந்தடைகின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மருந்து நிறுவனத்திற்காக பறவைகள் சரணாலயத்தில் பரப்பளவை குறைக்கும் நியாயமல்ல என மனுதாரரர் குற்றம்சாட்டினார். மருந்து நிறுவனம் அதன் எல்லையை அதிகரிக்கும் போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பு சுருங்கப்படுகிறது.

இது பறவைகளுக்கு ஏதுவான சூழலான இருக்காது. பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதேபோல பறவைகளின் வரத்தும் குறைந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முழுவதுமாக அழிந்துவிடும் என்ற அச்சம் இருப்பதால் அந்த சரணாலயத்தை இயற்கையோடு பாதுகாக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : government ,court ,area ,Tamil Nadu ,bird sanctuary ,Vedanthangal ,Vedanthangal Bird Sanctuary , Vedanthangal Bird Sanctuary
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்