×

சென்னையில் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டதால் சர்ச்சை: கல்வி அதிகாரி விசாரணை

சென்னை: சென்னை சூளைமேட்டியில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவிகள் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று ஜெயகோபால் கரோடியா பள்ளி அறிவித்துள்ளது. 11ம் வகுப்புக்கான விண்ணப்ப படிவம் ஆகஸ்ட் 10 தேதி முதல் வழங்கப்படும் என்று ஜெயகோபால் பள்ளி அறிவித்திருந்தது. மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது குறித்து கல்வி அதிகாரி அனிதா பள்ளியில் விசாரித்து வருகிறார்.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான செய்தி தவறு என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. 3-ம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.Tags : Chennai ,Jayagopal Corodia School ,Investigation ,Education Officer , Chennai, Education Officer, Investigation, Admission of Students
× RELATED ஆன்லைன் வகுப்பில் அமெரிக்க...