×

வி.கே.புரம் அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் அட்டகாசம்

வி.கே.புரம்:  வி.கே.புரம் அருகே உள்ள வேம்பையாபுரத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்தன. வி.கே.புரம் அருகே மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட மலையடிவார கிராமம் வேம்பையாபுரம் ஆகும். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர். தற்போது வயல்களில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இது 4மாத  பயிராக தற்போது உள்ளது.நேற்று முன்தினம் இரவு வேம்பையாபுரத்தை சேர்ந்த மருதுபாண்டி(40), காலனி தெருவைச் சேர்ந்த சங்கர்(40), இதே தெருவை சேர்ந்த பாண்டிதுரை(25), நடுத்தெருவை சேர்ந்த மாடசாமி(55), மெயின்ரோடு அந்தோணிராஜ்(70) ஆகியோரது  வயல்களில் ஏராளமான காட்டு பன்றிகள் புகுந்து வாழைகளை சாய்து நாசம் செய்துள்ளன. நேற்று காலை வயல்களுக்கு வந்த விவசாயிகள் வாழைகள் சாய்ந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ‘ஒவ்வொரு வாழைக்கும் நடவு உள்ளிட்ட செலவுகள் சுமாராக 50ரூபாய் வரை ஆகி உள்ளது. தற்போது காட்டு பன்றிகள் புகுந்து வாழைகனை பிடுங்கி நாசம் செய்துள்ளன. வனத்துறையினர் எங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதோடு காட்டு பன்றிகள் வயல்களில் புகாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.  ஏற்கனவே இப்பகுதியில் தான் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து ஆடு, நாய்களை தூக்கிச் சென்றது. இதனால் இப்பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து 7சிறுத்தைகளை பிடித்து காரையாறு பகுதியில் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : fields ,VKpuram , Wild boars,fields, VKpuram
× RELATED வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு