×

தர்மபுரியில் பரவலாக மழை நிலக்கடலையில் களை அகற்றும் பணி மும்முரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்பட 8 ஒன்றியங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்துபயிர்களில் ஒன்று  நிலக்கடலையாகும். தர்மபுரி மாவட்டத்தில் தான் நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகம். மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பி வைகாசி பட்டத்தில் (மே, ஜூன் மாதங்களில்) நிலக்கடலை நடவு செய்யப்படும். இதே போல் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபர், நவம்பர் மாதம் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும்.

தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதையொட்டி, நிலக்கடலை செடிகள் செழித்து வளர்ந்துள்ளது. சோகத்தூர் அருகே 100 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. நேற்று அப்பகுதியில் நிலக்கடலைக்கு களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால் இந்தாண்டு நிலக்கடலை மகசூல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : weeding ,Dharmapuri , Widespread weeding,rainfed groundnut ,Dharmapuri is , swing
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி