×

கொரோனா விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு...அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்குத் தடை கோரி பொதுநல வழக்கு!!

டெல்லி : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ செய்து வருகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போதுள்ள வரைப்படத்தின்படி ராமர் கோயலின் உயரம் 140 அடியாக உள்ளது. இதை மேலும் 20 அடிகள் உயர்த்த திடீரென திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோவிட்-19 ‘அன்லாக் 2.0’ விதிமுறைகளை மீறும் விதமாக அயோத்தியில் ராமர் கோயிலுக்காக பூமி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சாகெட் கோகலே என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சாகெட் கோகலே அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், நாட்டில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்குகள் போடப்பட்டு வரும் நிலையில் கொரோனா விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு நிறைய பேர் கூடும் வாய்ப்புள்ளது. இது கொரோனா விதிமுறைகளுக்கு எதிரானது.ஆகவே பூமி பூஜையை ஒத்திவைக்குமாறு உத்தரவிட வேண்டும், என்று சாகெட் கோகலே மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் நாள் கொரோனாவுக்கு முடிவுகட்டும் ஆரம்பம் என்று சில பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால் பூமி பூஜையை தள்ளி வைக்க அறிவுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : event ,Corona ,Ayodhya Ram Temple Bhoomi Puja , Corona, Rule, Public Performance, Ayodhya, Ram Temple, Bhoomi Puja, Prohibition, Cory, Case
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...