×

குமரி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!: ஒரே நாளில் 188 பேருக்கு தொற்று உறுதி..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினால் மேலும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த குமரி மாவட்டத்தில் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதன் எண்ணிக்கை 3,103 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவட்டார் மற்றும் கூட்டப்புளியை சேர்ந்த வயதான பெண்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. போதுமான நிதி ஒதுக்காததால் கொரோனா நோயாளிகளுக்கு நல்ல உணவு வழங்கவில்லை என்று புகார் கூறியுள்ளனர்.

கூடுதல் நிதி ஒதுக்கி துரித நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே குமரி மாவட்டத்தில் நோய் பரவலை தடுக்க முடியும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாகும். மேலும் நாகர்கோவில் சிறையில் இருந்த 18 கைதிகள், சிறை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 19 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாகர்கோவில் சிறைக்கு புதிதாக கைதிகள் யாரையும் அனுமதிப்பதில்லை. நாகர்கோவில் சிறைக்கு அழைத்து வரப்படும் கைதிகள் குழித்துறை சிறைக்கு மாற்றி அனுப்புகின்றனர்.

Tags : district ,Kumari , corona infection , Kumari district ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...