×

புதுச்சேரி பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!!!

புதுச்சேரி:  புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி ஆளுநர் உரையும், அதனைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சட்டசபை செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார். ஆனால் 19ம் தேதி இரவு சட்டசபை கூட்டத்தை மற்றொரு நாளில் தள்ளிவைக்கும்படி ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார். அதில், பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை என்பதால் சட்டப்பேரவை கூட்டத்தை மற்றொரு நாளில் வைத்துக்கொள்ளலாம் என எழுதியுள்ளார்.

இதற்கிடையில், ஆளுநரும், முதல்வரும் தொடர்ந்து கடிதம் அனுப்பினர். பின்னர், கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டமானது நடைபெற்றது. ஆனால் பட்ஜெட் கோப்பு வராததால், கிரண்பேடி சட்டப்பேரவைக்கு உரையாற்ற வரவில்லை. இதனைத்தொடர்ந்து, ஆளுநர் கிரண்பேடி அவர்கள் பட்ஜெட் தாக்கலை உடனடியாக செய்யவில்லை என்றால், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த நிலையில்தான், ஆளுநர் மாளிகை நிர்வாகம் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்ய ஆளுநர் கிரண்பேடிக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் உரையாற்ற சட்டபேரவைக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆளுநர் சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது அவருக்கு போலீசார் மரியாதை செய்தனர்.

பின்னர், சபாநாயக்கர் சிவக்கொழுந்து, கிரண்பேடிக்கு பூங்கொத்து கொடுத்து, பேரவைக்குள் அழைத்து சென்று, அவருடைய இருக்கையில் அமரவைத்தார். பின்னர், ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் கோப்பையை படிக்கத்தொடங்கினார். இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு கிரண்பேடி அவர்கள் சட்டப்பேரவையில் தன்னை விமர்சனம் செய்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் இன்று ஆளுநரின் உரையை புறக்கணித்து அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர்.

மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கரன் ஆகியோர், கடந்த 20ம் தேதி ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் தாக்கல் செய்யாததால், இன்று ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். மேலும் இதனைத்தொடர்ந்து, நேற்று எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என்றும் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த டி.எஸ்.பி அவர்கள் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை அவமத்திப்பு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர் ஆளுநர் கிரண்பேடி தனது உரையை முடித்துவிட்டு மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால், சட்டப்பேரவையானது மதியம் 3 மணியளவில் நடைபெறும் என்று சபாநாயக்கர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார்.

Tags : Governor ,speech ,AIADMK ,Puducherry Assembly , AIADMK members , Pondicherry Assembly ignoring ,Governor's speech ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...