×

சாத்தான்குளம் வழக்கில் சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!!!

மதுரை:  சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துறைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தான் குளம் வழக்கை விசாரித்து வருகின்ற சிபிஐ மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பாக டெல்லியிலிருந்து சாத்தான் குளம் வழக்கை விசாரணை நடத்த வந்திருந்த 8 பேர் கொண்ட குழுவில் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்களுக்கு மதுரை இரயில்வே மருத்துவமனையில் தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழுவில் இருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மேலும் புதிதாக 2 சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, இவர்களுக்கும் மதுரை இரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாத்தான் குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 காவலர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் சிறையில் அடைப்பதற்கு முன்னதாக, கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இவற்றின் முடிவுகள் தற்போது வெளியானதால், சிறையில் உள்ள சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துறைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 8 பேர் கொண்ட சிபிஐ குழுவில் ஏற்கனவே 4 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், மற்ற அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், இந்த வழக்கு விசாரணையானது விரையில் முடிக்கப்பட வேண்டும் என்ற வகையில், சென்னையிலிருந்து மேலும் பல சிபிஐ அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொள்வதற்காக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Corona ,jail ,Sathankulam ,Special Police Inspector ,police inspector , Corona ,Sathankulam , special police inspector ,
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு