×

ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:  
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. அதனடிப்படையில் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை நிராகரிக்காமல் 2 ஆண்டுகளாக ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளார். இதுகுறித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் வெளிப்படையாகவே தனது அதிருப்தியைத் தெரிவித்து இருக்றது. மாநில அரசின் பரிந்துரையை ஏற்கவோ நிராகரிக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் எந்த முடிவும் சொல்லாமல் நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்துறது’ என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  

7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்த தீர்மானத்தைத் தமிழக ஆளுநர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிராகரிக்கவில்லை. அந்த கோப்பை திருப்பியும் அனுப்பவில்லை. எனவே, அதை அவர் ஏற்றுக் கொண்டார் என முடிவு செய்து தமிழக அரசு அந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என நீதிமன்றங்களே தெரிவித்துவிட்ட நிலையில் இதற்குமேலும் அவர்களை சிறையில் வைத்திருப்பது நீதி ஆகாது. அதைத்தான் உயர் நீதிமன்ற நீதிபதியும் சுட்டிக்காட்டியிருக்றார். எனவே,இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு அந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

Tags : Tamils Thirumavalavan ,government ,Tamil Nadu ,Tamils , Governor's approval, Government of Tamil Nadu, Thirumavalavan, to release seven Tamils
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...