×

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் உயரம் 161 அடியாக அதிகரிப்பு: 2 மண்டபங்கள் கூடுதலாக சேர்ப்பு

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் உயரம் 141 அடியில் இருந்து, 161 அடியாக உயர்த்தப்படுகிறது. கோயில் வளாகத்தில் கூடுதலாக 2 மண்டபங்கள் கட்டப்பட உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கான பூமி பூஜை அடுத்த மாதம் 5ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்பாடுகளை, ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ செய்து வருகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தற்போதுள்ள வரைப்படத்தின்படி ராமர் கோயலின் உயரம் 140 அடியாக உள்ளது. இதை மேலும் 20 அடிகள் உயர்த்த திடீரென திட்டமிடப்பட்டு உள்ளது.
 
இது குறித்து கோயிலின் முதன்மை கட்டிட வடிவமைப்பாளரான சோம்புராவின் மகள் நிகில் கூறுகையில், “கோயிலின் வடிவமைப்பு மாதிரி, 1988ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. அதன் பிறகு 30 ஆண்டுகள் கடந்து விட்டது. மக்கள் கோயிலுக்கு வருவதில் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். எனவே, கோயிலின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என விரும்பினோம். இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயிலின் மாதிரியில், அதன் உயரம் கூடுதலாக 20 அடி உயரத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கோயிலின் 141 அடியில் இருந்து 161 அடியாக உயர்த்தப்பட உள்ளது. மேலும், 2 மண்டபங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. கோயில் கட்டும் திருப்பணிகள் முடிவதற்கு மூன்றரை ஆண்டுகளாகும்,” என்றார்.

Tags : halls ,Ram Temple ,Ayodhya ,Ramar Temple , Ayodhya, Ram Temple, height, 161 feet, increase, 2 halls, addition
× RELATED கல்யாண மண்டபம், ஓட்டல்கள்,...