×

விசாகப்பட்டினம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு: குண்டுகாயங்களுடன் பலர் தப்பி ஓட்டம்

திருமலை: ஆந்திராவில் விசாகப்பட்டினம் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டுகாயங்களுடன் பலர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் மாவோயிஸ்ட்கள் இயக்கத்தில் உயிரிழந்த தியாகிகளின் வார உற்சவம் இந்த வாரம் நடத்த இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவர்கள் நேற்று ஒடிசா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம், பெஞ்சங்கி வனப்பகுதியில் இருப்பதாக  தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர்.

இதனை அறிந்த மாவோயிஸ்ட்கள் முகடுப்பள்ளி வழியாக ஆந்திரா, விசாகப்பட்டினம் மாவட்டம், பூசப்பட்டு பெத்தபைலு மண்டலம்,  ஜானவிகூடா வழியாக சின்னலகோட்டா வனப்பகுதிக்கு வந்துள்ளனர். இதுகுறித்து ஆந்திர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது மாவோயிஸ்ட்கள் மூன்று குழுக்களாக பிரிந்து வருவதை அறிந்தனர். முதல் குழு போலீசாருக்கு நெருங்கிய தூரத்தில் சென்ற நிலையில் போலீசார் யூகத்தின் அடிப்படையில் அவர்களை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டனர்.

இரண்டாவதாக வந்த குழு மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் உயர்மட்ட குழுவை சேர்ந்த சலபதி, அவரது மனைவி அருணா உட்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் அவர்கள் தப்பிச் சென்றனர். மூன்றாவது குழுவில் மாவோயிஸ்ட் இயக்க உயர்மட்ட குழு தலைவர் ஹரி கோபாலகிருஷ்ணா வந்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் தாக்குதலை தொடர்ந்து அவரும் அவரும் குண்டு காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளார். அவர்களை பிடிப்பதற்காக வனப்பகுதியில் ஆந்திரா - ஒடிசா போலீசார் இணைந்து தீவிர தேடுதலில்  ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் ரத்த சுவடுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் பயன்படுத்திய சமையல் பொருட்கள் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : forest ,Maoists ,Visakhapatnam ,Many , Visakhapatnam forest, Maoists, police firing, escape
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!