×

தடையை மீறி செயல்பட்ட மருந்து குடோனுக்கு சீல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடக்கு மாட வீதியை சேர்ந்த ஒருவர், மருந்து மாத்திரைகள் மொத்த விற்பனை செய்து வருகிறார். இவர், தனது வீட்டின் கீழ்தளத்தில் மருந்து குடோன் வைத்து, அங்கிருந்து வட சென்னை முழுவதும் உள்ள மெடிக்கல்களுக்கு மருந்து மாத்திரைகளை சப்ளை செய்து வருகின்றார். இவரது மனைவிக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது வீட்டை தனிமைப்படுத்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், குறிப்பிட்ட காலம் முடியும் முன்பே இந்த வீட்டின் கீழ் தளத்தில் உள்ள குடோன் கதவை திறந்து அங்கிருந்து மருந்து மாத்திரைகள் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், தடையை மீறி மருந்து மாத்திரை சப்ளை செய்த அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

Tags : drug godown , violation , ban, drug godown, sealed
× RELATED ஈரோட்டில் தடையை மீறி வேல்யாத்திரை நடத்த முயன்ற பாஜகவினர் மீது வழக்கு