×

ஒரே நாளில் 424 பேருக்கு தொற்று

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 10,203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்களில் 424 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 424 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,627 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று
மட்டும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 180ல் இருந்து 188 ஆக உயர்ந்துள்ளது.

Tags : In one day, 424 people were infected
× RELATED தங்கம் சவரனுக்கு ரூ.424 குறைந்தது